கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்துள்ள படம் “காட்டி”. இதில் விக்ரம் பிரபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தனது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய தருணத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

அந்த போஸ்டரில் ரத்தம் வழிந்த முகத்துடன் அனுஷ்கா சுருட்டு பிடித்திருப்பது போன்ற காட்சி வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
ஆரம்பத்தில் இப்படத்தை ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் படக்குழு, வெளியீட்டை மே மாதத்திற்கு தள்ளி வைத்தது. தற்போதைய தகவலின்படி, “காட்டி” திரைப்படத்தை ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத ஆரம்பத்தில் திரைக்கு கொண்டு வர தயாராகி வருவதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.