தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், காதல் கிசுகிசு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி பேசப்பட்டார்.

கடந்த சில வருடங்களாக அவர் மும்பையில் வசித்து வருகிறார். அவருக்கும் ஒரு நடிகருக்கும் காதல் தொடர்பு இருப்பதாக பல கிசுகிசுக்களும் பரவியிருக்கின்றன.
இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன், “நான் தற்போது முழுமையாக சிங்கிள். எவருடனும் Relationship-ல் இருக்க விரும்பவில்லை . எனக்கு பிடித்ததை செய்து என் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.