Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

வெற்றி கோப்பைகளுடன் அஜித்… வைரலாகும் புகைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவர் olan அஜித்குமார், நடிகராக மட்டுமின்றி கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டியில், அவர் சேர்ந்திருக்கும் அணி மூன்றாவது இடத்தைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இதேபோன்று சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்திலும் அஜித்குமார் பங்கேற்ற அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. இதையடுத்து, பெல்ஜியத்தில் உள்ள Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில், அஜித் தனது அணியுடன் கலந்துகொண்டார்.

இந்த போட்டியில், அஜித்தின் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து பெரும் சாதனையை நிகழ்த்தியது. இந்த வெற்றியைப் பற்றிக் கருத்து தெரிவித்த அஜித், “எனது ரேஸிங் பயிற்சியிலிருந்து இந்த வெற்றிக்கான பயணம் முழுவதும், உங்கள் ஆதரவின்றி ஜிடி4 பந்தயத்தில் இந்த வெற்றியை அடைய முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைத்து நபர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி,” என கூறினார். இதனிடையே, வெற்றி கோப்பையை கையிலே பிடித்து நின்று கொண்டிருக்கும் அஜித்தின் புகைப்படத்தை ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News