1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், தனது அழகான நடன அசைவுகளால் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார். சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், சில படங்களில் குழந்தைகளுக்கு தாய் போன்று கதாபாத்திரங்களிலும் நடித்து வரவேற்பை பெற்றார். குறிப்பாக ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து மகிழ்வும் பாராட்டும் பெற்றார். தற்போது நடிகர் சசிகுமாருடன் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். அடுத்து, லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், ஒரு தனியார் விருது விழாவில் கலந்து கொண்ட சிம்ரன் பேசுகையில், “சமீபத்தில் ஒரு சக நடிகையிடம், நீங்கள் அந்தப் படத்தில் ஏன் நடித்தீர்கள் என வியப்புடன் கேட்டேன். அதற்கு அவர், ‘உங்களைப் போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது நல்லது’ என பதிலளித்தார். அந்த பதில் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வளவு புரிதலற்ற பதிலை எதிர்பார்க்கவே இல்லை. அதற்குப் பதிலாக நல்ல பதிலொன்று கிடைத்திருக்கலாம்.
நான் 25 வயதில் இருந்தபோதே ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ என்ற படத்தில் முக்கியமான ஆன்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘டப்பா’ கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இதுபோன்ற முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதே சிறந்தது” என கூறினார் சிம்ரன். இவரது இந்தக் கருத்தைத் தொடர்ந்து, அவர் குறிப்பிடும் அந்த நடிகை யார் என்பதைப் பற்றிய வாதங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.