Pink Talkies: https://youtube.com/@pinktalkies?si=6SkJ9Qhlz9ctbRDA
அன்பிற்குரிய டூரிங் டாக்கீஸ் ரசிகர்களுக்கு சித்ரா லட்சுமணனின் அன்பு வணக்கம்!
டூரிங் டாக்கீஸ் பெண் ரசிகைகளுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்இன்று மகளிர் தினம் உலகம் முழுதும் பெண்களை போற்றுகின்ற வகையில் உலகம் முழுவதும் பல கொண்டாட்டங்கள், விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மகளிர் தினத்துக்கு நாம் எந்த வகையிலே சிறப்பு சேர்க்கலாம் என்று சிந்தித்த போதுதான் பெண்களுக்கென்று நீங்கள் ஏன் தனியாக ஒரு சேனலை நடத்தக் கூடாது என்று டூரிங் டாக்கீஸ் ரசிகைகளில் பலர் பல மாதங்களாக கேட்டுக் கொண்டு இருந்தது என் நினைவுக்கு வந்தது. உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது தானே டூரிஸ்ட் டாக்கீசின் தலையாய கடமையாக எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் இன்று முதல் பெண்களுக்கு என்று பிங்க் டாக்கீஸ் என்ற பெயரிலே ஒரு யூட்யூப் சேனலைத் தொடங்கி இருக்கிறோம்.
Pink Talkies: https://youtube.com/@pinktalkies?si=6SkJ9Qhlz9ctbRDA
பிங்க் டாக்கீஸ் முதல் நிகழ்ச்சியாக மருத்துவரும் சமூக அக்கறை கொண்டவருமான டாக்டர் சுதா சேஷையன் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பாகி இருக்கிறது, பெண்கள் என்ன மாதிரியான கிரீம்களை பயன்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பானது, முடிக்கு வண்ணம் சேர்ப்பதற்காக என்ன மாதிரியான ஹேர் டைகளை பயன்படுத்துவது நல்லது, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி எல்லாம் பல நல்ல நல்ல தகவல்களை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் டாக்டர் சுதாகர் தொடர்ந்து பெண்களுக்கு பயன் அளிக்கின்ற பல விஷயங்கள் இந்த பிங்க் டாக்கீஸ் ஒளிபரப்பாக இருக்கின்றன டூரிங் டாக்கீஸ், சோசியல் டாக்கீஸ், டூரிங் சினிமாஸ், ஆன்மீக டாக்கீஸ் ஆகியவைகளுக்கு எப்படிப்பட்ட வரவேற்பினையும் ஆதரவையும் நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறீர்களோ அப்படிப்பட்ட ஆதரவை பிங்க் டாக்கீஸ்க்கும் நீங்கள் அளிக்க வேண்டும் என்று உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இந்தச் சேனலில் என்னென்ன நிகழ்ச்சிகள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்பதைப் பற்றியும் என்னென்ன மாற்றங்களை இந்த சேனலிலே நாங்கள் கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றியும் தொடர்ந்து கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள் நன்றி வணக்கம்