தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். கடைசியாக அமரன் படத்தில் நடித்த அவர், அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தற்போது, ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2023-ம் ஆண்டு வெளியான ‘2018’ திரைப்படத்தை இயக்கிய ஜுட் ஆண்டனி, தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய படத்திற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.