ரங்கூன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்தன. கடந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் 31 அன்று வெளியான இந்த திரைப்படம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155747-1024x710.jpg)
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸாகவும் நடித்துள்ளனர். மேலும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீகுமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து, வசூலில் சாதனை படைத்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155745.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155746.jpg)
இந்த நிலையில், அமரன் திரைப்படம் வெளியானு 100 நாட்களை கடந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இப்படம் சிப்பாய் விக்ரமின்றி முழுமை பெறாது என தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் X (Twitter) தளத்தில் கூறியதாவது, இந்தக் கதையில், இரண்டு துணிச்சலான இதயங்களின் உண்மையான பிணைப்பை சொல்ல முடிந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. கடமையால் இணைக்கப்பட்டும், மரபால் அழியாத உறவாக மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரமின் உறவு இருக்கிறது. அது சகோதரத்துவம் மற்றும் தோழமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.சிப்பாய் விக்ரமின் கதையை உலகுக்கு அறிமுகப்படுத்த உதவிய அவரது குடும்பத்தினரின் தாராள மனப்பான்மைக்கு எனது மனமார்ந்த நன்றி. அவர்களுக்கு வணக்கங்களும், அன்பும்!” என அவர் பதிவிட்டுள்ளார்.