அஜித் குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு சென்று ‘விடாமுயற்சி’ திரைப்படத்தைக் கண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதும் போல அஜித் சாரின் ரசிகராகவே வந்துள்ளேன். நான் அஜித் சாரின் போஸ்டர் ஒட்டிய பையன், இப்போது அவருடைய படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம். அதைவிட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை. உழைப்பில் அஜித் சாரை மிஞ்ச யாரும் இல்லை,” என்று தெரிவித்தார்.இதற்கிடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடித்த ‘Good Bad Ugly’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.