மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள அஜித்தின் ‘விடா முயற்சி’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 6) திரைக்கு வரவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில், ரெஜினா ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு, சில நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் முதல் முறையாக இவர் வில்லியாக நடித்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154446-818x1024.jpg)
இதுகுறித்து ரெஜினா கூறியிருப்பதாவது: “இதுவரை வெளியான டிரெய்லரை மட்டும் வைத்து என் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என யூகிக்க வேண்டாம். இதில் என் கதாபாத்திரத்திற்கு பல அடுக்குகள் உள்ளன. திரையரங்கில் பார்வையாளர்கள் என்னுடைய வேடத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154447-797x1024.jpg)
ஆரம்பத்தில், மகிழ் திருமேனி என்னை வேறொரு கதாபாத்திரத்திற்கு அழைத்தார். ஆனால், ஒரு வாரம் கழித்து, தற்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அஜித் மற்றும் அர்ஜுன் என இரண்டு பெரிய நடிகர்களுடன் நடிக்க முடிவது எனக்கு பெரிய வாய்ப்பு. இருவரையும் நேரில் பார்த்ததும், வியப்பாக இருந்தது. அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.இப்படத்தில், அஜர்பைஜான் நாட்டில் பாலைவனத்தில் நடித்த சண்டைக் காட்சிகள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” எனக் கூறினார்.