Saturday, February 1, 2025

உங்களுடன் இருப்பவர்களையும் வெற்றியடைய செய்யுங்கள்… சிவகார்த்திகேயன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது அவர் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று திருச்சியில் உள்ள தனது பள்ளி நிகழ்ச்சி விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

“இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை நான் படித்தேன். இன்று நான் ஒரு நடிகர் மற்றும் சிறப்பு விருந்தினர் என்று இருக்கிறேன். ஆனால், அந்த எல்லாவற்றையும் தாண்டி, இந்த பள்ளியில் படித்து வளர்ந்துள்ளேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த பள்ளியை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன். இப்போது மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் சமூக ஊடகங்களின் அழுத்தம் இருக்கலாம். ஆனால், பள்ளி வாழ்க்கையை தவிர்க்காமல், அதை அனுபவிக்க வேண்டும். நல்ல முறையில் படிக்கவும்.

எனக்கு ஒரு படம் ஹிட் ஆகும் சந்தோஷத்தை விட, இந்த பள்ளியில் வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதும் எனக்கு அந்த சந்தோஷத்திற்கு கூட ஒரு சதவீதம் அதிகமான சந்தோஷத்தை அளிக்கின்றது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், அதேபோல், அருகிலுள்ளவர்களையும் வெற்றியடையச் செய்ய வேண்டும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News