Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் SK25 பட அப்டேட் வெளியான நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் SK23 படப்பிடிப்பின் நிலவரம் என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் தர்பார் படத்திற்கு பின் நீண்ட இடைவெளி எடுத்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

இப்படத்தில் பிரபல கன்னட நடிகையான ருக்மினி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு நடுவே சல்மான் கான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றதால் அந்த படத்தில் கவனம் செலுத்தினார். அப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தைத் தொடங்கவுள்ள முருகதாஸ் மீதமுள்ள காட்சிகளை அடுத்த மாதத்துக்குள் முடிக்கவுள்ளாராம். அதன் பின்னர் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும்  சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25வது படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தின் டைட்டில் வீடியோ நேற்று வெளியானது. இந்த திரைப்படத்துக்கு பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News