2016 ஆம் ஆண்டில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் இணைந்து நடித்த படம் ‘ரஜினி முருகன்’. சூப்பர் ஹிட்டான இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
‘ரஜினி முருகன்’ படம் திரைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, இந்த படம் விரைவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் ரீ ரிலீஸ் மூலம், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் முதன்முறையாக ரீ-ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.