ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கேம் சேஞ்சர் திரைப்படம் மதுரையைச் சேர்ந்த ஒரு ஆட்சியரின் உண்மையான வாழ்க்கை சம்பவங்களை மையமாகக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “கேம் சேஞ்சர் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம். இந்த கதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அவுட்லைன் ஆகும். மதுரை மாவட்ட ஆட்சியரின் உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து கதை எழுதப்பட்டது. அதை நாம் ஆந்திராவில் நடக்கும் கதையாக மாற்றினோம். ஒரு அரசியல்வாதி மற்றும் ஒரு ஆட்சியருக்கிடையிலான போராட்டமே இப்படத்தின் மைய கதை. படம் அருமையாக வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.