Thursday, January 9, 2025

10 மணிநேர பேருந்து பயணத்தில் நடக்கும் சம்பவம்… அடுத்தடுத்து என்னவென எதிர்ப்பார்ப்பை கிளப்பிய டென் ஹவர்ஸ் ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. ஒரு பேருந்தில் 10 மணி நேர பயணத்தின் போது ஒரு கொலை நிகழ்கிறது, மேலும் ஒரு இளம்பெண் காணாமல் போகிறார். அந்த 10 மணி நேரத்தில் பல குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த சம்பவங்களை யார் செய்தார்கள், எவ்வாறு நடந்தது என்பதை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சிபி சத்யராஜ் கண்டறிகிறார்.

இந்த நிலையில், ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலரை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். மேலும், திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News