Monday, January 6, 2025

வசதியிருந்தால் இப்படி செய்யலாமா? புகைப்படங்களுக்கு மோசமான கமெண்ட் செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை ஹனிரோஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ஜீவா இரு வேடங்களில் நடித்த சிங்கம்புலி படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தவர், பின்னர் மலையாள திரையுலகில் நிறைய வாய்ப்புகளை பெற்றார். மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, பிஸியான நடிகையாக மாறினார். இடையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும், அம்மா கதாபாத்திரத்திலும் ஒரு படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சியுடன் பட்டாம்பூச்சி என்ற படம் மூலம் தமிழில் மீண்டும் களமிறங்கினார். சமீபத்தில், தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, புதிய ஒரு படத்தையும் தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தனது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டமான ஒரு பதிவை ஹனிரோஸ் இன்று வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:“சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி ட்ரோல் செய்யும் கமெண்ட்களுக்கு நான் பதில் அளிப்பதில்லை. காரணம், அவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற பரிதாபமே. ஆனால் சமீபகாலமாக ஒரு நபர் தொடர்ந்து என்னை சோசியல் மீடியாக்களில் தரக்குறைவாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இத்தனைக்கும், அந்த நபர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோது, என்னை ஏளனமாக விமர்சித்தார். அதன்பிறகு, அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டேன். இதனால் கோபமடைந்த அவர், இப்போது பொதுவெளியில் என் பெயரை தேவையில்லாமல் இழுத்து, எனக்கு களங்கம் ஏற்படும் விதமாக நடந்து கொள்கிறார்.

ஆரம்பத்தில் நான் அமைதியாக இருந்தாலும், என்னை சுற்றியுள்ள நலம் விரும்பிகள், ‘அந்த நபர் இப்படி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு ஏன் பதில் சொல்லவில்லை? ஒருவேளை நீ இதைப் ரசிக்கிறாயா?’ என்று கேட்கத் தொடங்கினர். நான் கண்டிப்பாக இல்லை. அந்த நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன். வசதி படைத்தவர் அல்லது செல்வாக்கு மிக்கவர் என்றால், என்ன வேண்டுமானாலும் பேசலாமா? அந்த நபரின் பெயர் என்ன என்பதை இப்போது நான் குறிப்பிட விரும்பவில்லை,” என்று ஹனிரோஸ் எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி தவறான கருத்து கூறியவர்கள் மேல் வழக்குபதிவு செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News