Saturday, January 4, 2025

ஷங்கர் சார் தான் எங்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன்… இயக்குனர் ஷங்கர்-ஐ புகழ்ந்த இயக்குனர் ராஜமௌலி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராம் சரண் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படம், வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால், கடந்த சில வாரங்களாக இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் ராஜமவுலியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த மேடையில், ராம் சரண், இயக்குனர் ஷங்கர், மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோரின் முன்னிலையில் ராஜமவுலி பேசும் போது, “பிரம்மாண்டமான படங்களை உருவாக்க நான்தான் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறேன்” என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில், நான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்து எனக்கு மிகப்பெரிய த்ரூவமாக இருந்தவர் இயக்குனர் ஷங்கர் தான்,” என்று நினைவுகூர்ந்தார்.

ராஜமவுலி தனது உரையில் தொடர்ந்து, “பிரம்மாண்டமான படங்களை உருவாக்கினால் மக்கள் திரையரங்கிற்கு கூட்டமாக வருவார்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு முதலில் கொடுத்தவர் ஷங்கர் தான். அவருடைய படங்கள் எங்களுக்கு நம்பிக்கை மட்டுமல்ல, எனது பிரம்மாண்டமான படங்களை இயக்குவதற்கான முயற்சிகளுக்கு அவரே மிகப்பெரிய முன்மாதிரியாக இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்,” என்று புகழ்ந்து பேசினார்.

- Advertisement -

Read more

Local News