பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், தனது காதலர் ஜாகீர் இக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை சுற்றி வட மாநிலங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன.
பிரபலங்கள் பெரும்பாலும் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு, காதலர் தினம் போன்ற முக்கிய தினங்களை வெளிநாடுகளில் கொண்டாடுவது வழக்கம். அதுபோல, தனது காதலர் கணவருடன் சோனாக்ஷி இந்த புத்தாண்டை வரவேற்க ஆஸ்திரேலியாவில் சென்றுள்ளார். அதுவும், ஆஸ்திரேலியாவின் பிரபலமான ஜமலா வைல்ட் லைஃப் லாட்ஜில் கொண்டாடியுள்ளார்.
சிங்கங்கள் சூழ்ந்த த்ரில்லான இடத்தில் புத்தாண்டை வரவேற்கக் கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள், “இந்த உலகத்தில் வேறு இடமில்லை என சோனாக்ஷி சின்ஹா இங்கு வந்திருக்கிறாரா?” என கேள்வியெழுப்புகின்றனர். மேலும், இவர்கள் ஜமலா லாட்ஜுக்கு சென்றதோடு மட்டுமல்லாமல், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியையும் நேரில் சென்று பார்த்துள்ளனர்.