ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழில் இந்த படத்தை நேரடி படமாக வெளியிடும் வகையில் பிரம்மாண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாளை, ஜனவரி 4ஆம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கேம் சேஞ்சர் வெளியீட்டிற்கான முன்னோட்ட விழா நடைபெற உள்ளது. இதில் சிரஞ்சீவி குடும்பத்தினர் முழுவதும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. மேலும், ஆந்திர மாநில துணை முதல்வரும் சிரஞ்சீவியின் தம்பியுமான நடிகர் பவன் கல்யாண், சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் பங்கேற்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றே வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஜனவரி 7ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இப்படத்திற்கான சிறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நடிகர் விஜய்யை அழைத்துள்ளதாகவும், அவர் இதில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்தவர் என்பதால், விஜய் இந்த விழாவில் பங்கேற்பார் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய் நண்பன் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்திருந்ததையும், விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தும் குறிப்பிடத்தக்கது.