ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு, இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ராம் சரண் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு நடித்து வெளியாகும் படம்இருப்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் அனைத்து விநியோக உரிமைகளும் வெளியீட்டிற்கு முன்பே முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகளின் மூலம் மட்டும் தயாரிப்பாளருக்கு 150 கோடிக்கு மேற்பட்ட வருவாய் கிடைத்துள்ளது. தியேட்டர் வசூலின் மூலம் மீதமுள்ள தொகையும் உறுதியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தெலுங்குத் திரையுலகில் இன்னொரு மிகப்பெரிய வெற்றி படமாக இப்படத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் பல்வேறு விளம்பர முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.