Tuesday, December 17, 2024

புறநானூறு படத்தின் டைட்டில் பெறுவதில் சிக்கலா? உலாவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ‘புறநானூறு’ படமே தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ‘புறநானூறு’ என்ற தலைப்பு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. அந்த தலைப்பு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் பதிவு செய்யப்பட்டதாம். அந்தத் தலைப்புக்காக அவர்கள் ஏற்கனவே சில கோடிகளை செலவழித்துள்ளனர்.

சுதா, சிவகார்த்திகேயன் இணையும் இந்த புதிய படத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை 2டி நிறுவனம் விட்டுக் கொடுப்பார்களா என இனிதான் தெரியவரும்.

- Advertisement -

Read more

Local News