Monday, December 16, 2024

சூது கவ்வும் 2 எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூது கவ்வும் 2ம் பாகத்தில் மிர்ச்சி சிவா தலைமையிலான கூட்டணி ஆட்களை கடத்தி, அதனை பணமாக மாற்றுவதை ஒரு தொழிலாக கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நிதியமைச்சர் கருணாகரன் எதிர்பாராத விதமாக சிவாவின் கடத்தலில் சிக்கிக் கொள்கிறார். நடக்கவுள்ள தேர்தலில், கருணாகரன் ஆன்லைன் மூலம் மக்களுக்கு பணம் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், அவர் கடத்தப்பட்டதால் இந்தத் திட்டம் தடைபடுகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முதல் பாகத்தின் கதையையும் இதில் சில பகுதிகளை சேர்த்திருப்பதோடு, மேலும், அமைச்சர் கடத்தல், அடுத்து நடக்கவுள்ள தேர்தல், கட்சித் தலைவரின் புதிய கட்சி உருவாக்கம், சிவாவின் கூட்டத்தைக் கண்டுபிடிக்க முயலும் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் என பல கிளைக் கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படியான பல விவரங்களால் கதை மற்றும் திரைக்கதை எதுவென்று சற்று யூகிக்க கடினமாக அமைகிறது.

மிர்ச்சி சிவா, தனக்கே உரிய ஒன்-லைன் வசனங்களால் சிரிக்க வைக்கிறார். அதுவே படம் முழுக்க சிறிதளவு ரகசிய குதூகலத்தை அளிக்கிறது. ஆனால், மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும் போது, விஜய் சேதுபதி தனது திறமையின் அரைபங்குக்கூட இந்த கதாபாத்திரத்தில் சேர்த்திருப்பதாக தோன்றவில்லை. இதற்குப் பதிலாக, மிர்ச்சி சிவாவின் இந்த கதாபாத்திரத்தைக் கொண்டாட முடியாத அளவிற்கு அது மனதில் பதியவில்லை. முதல் பாகத்தில் சஞ்சிதா ஷெட்டி தனது கிளாமர் வேடத்தில் மிரட்டியிருந்தார், ஆனால் இந்தப் பாகத்தில் ஹரிஷா அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார்.

சிவாவின் கூட்டணியில் கல்கி ராஜா, கவி ஆகியோர் முக்கியத்துவம் பெற்றுள்ளார்கள். அவ்வப்போது அருள்தாஸும் இந்தக் கூட்டணியில் சேர்ந்து கொள்கிறார். அவர்கள் அதிக நேரம் மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதிலும் தான் செலவிடுகிறார்கள். இதனால் படம் முழுவதும் திரையில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு அந்த விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நிதியமைச்சர் கருணாகரனாக எம்எஸ் பாஸ்கர், அவரது தந்தையாகவும் முதல்வராக ராதாரவி, கட்சியின் நிறுவனராக சந்திரசேகர், முன்னாள் காவல் துறை அதிகாரியாக யோக் ஜபீ ஆகியோர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆனால் இந்த கதாபாத்திரங்களின் பங்களிப்பு, பார்வையாளர்களின் மனதில் பெரிதாக பதியவில்லை .முதல் பாகத்தின் மேக்கிங் ஸ்டைல் இந்த இரண்டாம் பாகத்தில் முழுவதுமாக இல்லை. முதல் பாகத்தினை போன்று‌ இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக கொண்டுவர முயற்சி செய்திருக்கலாம்.

- Advertisement -

Read more

Local News