Monday, November 25, 2024

கேம் சேன்ஜர் படத்தை தொடர்ந்து மைசூரில் தொடங்கிய தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார் நடிகர் ராம் சரண்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உப்பேனா பட இயக்குநர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் தனது 16வது படத்தில் நடிக்கிறார். இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சிவராஜ் குமார் மற்றும் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் முதல் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று மைசூரில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்காக படக்குழு ஏற்கனவே மைசூரில் சென்று இணைந்துள்ளனர்.

நேற்று, ராம் சரண் ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் மைசூருக்கு வந்தார். அவரது வருகை பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News