இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துக் கொண்டிருக்கின்றன. தற்போது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை கொண்டு ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதற்குப்புறம், ஹிந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ எனும் படத்தை இயக்குவதிலும் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களாக ஏ.ஆர். முருகதாஸ், கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த சூழலில், திடீரென சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தியை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் புதிய படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.