Monday, November 4, 2024

கார் ரேஸ் பயிற்சியில் அஜித்..‌‌. காரில் அஜித் தீயாய் பறக்கும் வீடியோ வைரல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஐரோப்பா ஜிடி4 ரக கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இதற்காக, படப்பிடிப்புகளுக்கிடையேயான இடைவெளியில் அவர் கார் பந்தயத்திற்கு தீவிரமாகப் பயிற்சியெடுத்து வருகிறார்.

அஜித், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துவிட்டுப் பின்பு, ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் படப்பிடிப்பு மற்றும் மறுபக்கம் கார் பந்தய பயிற்சி என அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாவது உறுதி எனக் கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘விடாமுயற்சி’ படம் கூட பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்றுதான் ‘விடாமுயற்சி’ படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் ஆரம்பமாகியது. இதன் இடையே, அஜித் கார் பந்தயத்திற்கான தனது தயாரிப்புகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவுகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News