Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஷங்கரின் கேம் சேன்ஜர் படத்தின் டீசர் எப்போது? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான கதையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் முக்கியமான வேடங்களில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார், மேலும் ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் “ஜரகண்டி” மற்றும் “ரா மச்சா மச்சா” எனும் பாடல்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. பொங்கல் திருநாளை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 75 நாட்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். டீசரின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அது விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளனர். எனவே, இந்த படத்தின் டீசர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News