Monday, November 18, 2024

ரஜினிகாந்த்-ஐ இயக்குகிறாரா மணிரத்னம்? அட இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன் 2′ படத்திற்குப் பிறகு மணிரத்னம் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவார்கள் என்று தகவல் வெளியானது. 1991ல் வெளியான ‘தளபதி’ படத்திற்குப் பிறகு அவர்கள் 30 வருடங்களுக்கும் மேலாக மீண்டும் இணைந்து பணிபுரியவில்லை.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட பிறகுதான், அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரிவது பற்றிய செய்தி வெளியாகியது. அப்போது, மணிரத்னம், ரஜினியுடன் சந்தித்து கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்ததாகவும், லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கப்போகிறது என்று கூறப்பட்டது. ஆனால், பின்னர் கமல்ஹாசனுடன் மணிரத்னம் இணைந்து ‘தக் லைப்’ எனும் புதிய படம் தொடங்கியது. இடையே என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணி பற்றிய செய்தி இப்போது மீண்டும் வெளிவந்துள்ளது. சினிமா வட்டாரங்களில் இதை உறுதியற்ற தகவல் என கூறுகிறார்கள். மணிரத்னத்துடன் ரஜினி மீண்டும் இணைவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தாலும், அவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.

- Advertisement -

Read more

Local News