Wednesday, September 25, 2024

தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு… ஏ.ஐ குறித்து கற்க அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். உலகத் திரையுலகத்தில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் போது, அவற்றை ஆராய்ந்து தன் படங்களில் பயன்படுத்துவதில் கமல் முன்னோடியாக உள்ளார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படப்பிடிப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது சினிமா தொழில்நுட்பம் ‘ஏஐ’ கட்டத்தை நோக்கி நகரத் துவங்கியதால், கமல்ஹாசன் அமெரிக்காவில் மூன்று மாத பயிற்சியில் கலந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த பயிற்சியை முடித்த பின், அவரது அடுத்த படத்தின் துவக்கம் குறித்து முடிவெடுப்பார் எனக் கூறப்படுகிறது. 

அவரது அடுத்த வெளியீடாக ‘தக் லைப்’ 2025 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பின்னர் ‘இந்தியன் 3’ படப்பிடிப்பு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.‌ இதற்குப் பிறகு ‘கமல்ஹாசன் 237’ படம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News