Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இது ரத்தத்தால் கடல் மொத்தம் சிகப்பான கதை… எதிர்ப்பார்ப்பை கிளப்பிய ஜூனியர் என்டிஆர்-ன் தேவரா பட டிரெய்லர்! #DEVARA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் ‘தேவரா பாகம் 1’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தனது முதற்கட்ட முயற்சியை தொடங்குகிறார்.

இத்திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் இது பேன் இந்தியன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் இப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடல்களான ஃபியர் சாங் மற்றும் “சுத்தமல்லி” பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது, அதில் ஜூனியர் என்.டி.ஆர் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். தந்தையாக அவர் வீரமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க, மகனாக அவர் அனைத்து விஷயத்திற்கும் பயப்படுகிற ஒரு இளைஞனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் அதிக அளவில் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News