Saturday, September 14, 2024

கடைசிக் கட்டத்தை நோக்கி நகர்ந்த தக் லைஃப் படப்பிடிப்பு! #ThugLife

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பல வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைப்’. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி ஆகிய பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ், ராஜ்கமல் நிறுவனம், மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், டில்லி, புதுச்சேரி, கோவா போன்ற இடங்களில் நடைபெற்றது. கமல்ஹாசன் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளது.

தற்போது, சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா உள்ளிட்ட பலரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News