Monday, November 18, 2024

அமரன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சிவகார்த்திகேயன்! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கின்றார். இந்த படத்தை, மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் வழங்கியுள்ளார்.தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து இன்னும் 4 நாட்கள் டப்பிங் பேசுவதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

Read more

Local News