Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

என் தூக்கத்தைத் தூரத்திவிட்டது உள்ளொழுக்கு திரைப்படம்… படத்தை பாராட்டி கவிதை எழுதிய கவிஞர் வைரமுத்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் பெற்றோர்களின் வற்புறுத்தலால் விருப்பமில்லாத கட்டாய திருமணத்துக்கு ஆளாக்கப்படுகிறார் அஞ்சு பார்வதி திருவோத்து. மணமுடித்த சில நாட்களில் கணவன் தாமஸ் குட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை அஞ்சுவும் மாமியார் லீலாம்மா (ஊர்வசி) மகனை பார்த்துக்கொள்கின்றனர். எந்தவித மகிழ்ச்சியுமில்லாமல் நகரும் நாட்களில், அஞ்சுவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவரது காதலன் ராஜீவ் (அர்ஜூன்). இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து பேசிவதன் விளைவாக அஞ்சு கர்ப்பம் தரிக்கிறார். மறுபுறம் கணவன் தாமஸ் குட்டியின் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்து விடுகிறான். 

இந்த திருப்பங்களுடன் சேர்ந்து அஞ்சு – லீலாம்மாவுக்கு இடையே பனிப்போர் மூள்கிறது. அதற்கு என்ன காரணம்? அவர்களுக்குள் படிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது தான் படத்தின் கதை. 19 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கைக்குள் தள்ளப்பட்ட லீலாம்மா, விரும்பத்துக்கு மாறான மணவாழ்க்கையில் சிக்கி தவிக்கும் அஞ்சு ஆகிய இரு பெண்களின் வழியே தலைமுறை தலைமுறையாக நிகழ்த்தப்படும் கட்டாய மணமுடிப்புகளை அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோ டாமி.

பலரின் பாராட்டை பெற்ற இந்த படத்தை பார்த்த கவி பேரரசு வைரமுத்து பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பாராட்டி கவிதை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News