Tuesday, November 19, 2024

எந்தவொரு உறவையும் கவனத்துடன் சரியாக எல்லைகள் வகுத்துப் பழகுங்கள் – ஜான்வி கபூர் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2018ம் ஆண்டு `Dhadak’ திரைப்படம் மூலமாக ஆரம்பித்தது ஜான்வி கபூரின் பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், சாதி குறித்து அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும், முரண்களையும் அறிந்துகொள்வதில் ஆர்வமிருப்பதாகவும், வரலாற்றை அறிந்து கொள்வதில் தனக்கு ஆர்வம் அதிகமிருப்பதாகவும் கூறியது பேசு பொருளாகியது.

இந்நிலையில் இன்றைய ‘Gen Z’ இளம் தலைமுறையினர் எந்தவித கமிட்மன்ட்டும் இல்லாமல் குறுகிய காலத்திற்கு மட்டுமே காதல் செய்யும் ‘Situationship’ பற்றிப் பேசியிருக்கும் ஜான்வி கபூர், “இது மிகவும் முட்டாள் தனமான உறவுமுறை என்று நான் கருதுகிறேன்.

ஒருவருடன் நீங்கள் பழகினால் நேர்மையாக, அர்ப்பணிப்புடன் பழகுங்கள். அதை விட்டுவிட்டு அவர்களுடன் பழகி, அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்காதீர்கள். ஒரு உறவில் குறுகிய காலம்தான் பழகப்போகிறோம் என்று நன்கு தெரிந்து கொண்ட பிறகும், ஒருவருடன் பழகி எல்லாம் செய்துவிட்டுப் பிடிக்கவில்லை என்று ஓடிவிடுவது முட்டாள் தனமான உறவுமுறை இல்லையா?

எந்தவொரு உறவையும் கவனத்துடன் சரியாக எல்லைகள் வகுத்துப் பழகுங்கள். குறிப்பாக, பெண்களே இதுபோன்ற உறவுகளில் ஏமாந்துவிடாதீர்கள். அப்படி உங்களை ஏமாற்றுபவர்களாக இருந்தால் உடனே அவர்களை உறவிலிருந்து உதைத்துத் தள்ளி விட்டுவிடுங்கள். அவர்களுடனானப் பழக்கத்தை நிறுத்திவிடுங்கள். நானும் இதில் ஏமார்ந்து உடைந்து போயிருந்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக என்னை ஏமாற்றிய அதே நபரே, மீண்டும் என்னிடம் வந்து உடைந்த என் மனதைச் சரிசெய்துவிட்டார்” என்று மனம் திறந்த பேசியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News