வேட்டையன் படத்தில் நடித்து முடித்த ரஜினிகாந்த், தனது 171-வது படமான கூலி படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. கூலி படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் கூலி படத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கின்றார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கூலி படமும் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடங்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.LCU பட வரிசையில் கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. ஃபகத் ஃபாசில் வேட்டையன் படத்திலும் நடித்துள்ளார். அதனால் இரண்டு படங்களில் அவர் வேட்டையன் படத்தில் என்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் கூலியில் என்ன கதாபாத்திரத்தில் நடிப்பார் என அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
லியோ படத்தில் கமல் ஹாசன் பேசுவது போன்ற காட்சி க்ளைமேக்ஸில் அமைக்கப்பட்டது. இதனால் கமல் ஹாசன் கூலி படத்திலும் நடிக்க வாய்ப்புளதா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் ரஜினி மற்றும் கமலை இணைக்கும் பாத்திரமாக ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல்கள் உலாவருகின்றன.