Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எதிர்காலம் நல்ல நபரின் கைகளில் தான் இருக்கிறது… பவன் கல்யான் குறித்து இயக்குனர் மோகன் ராஜா பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. அவர் இயக்கிய பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அவரின் ‘தனி ஒருவன்’ படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘காட் ஃபாதர்’ திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார். இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் ரீமேக் ஆகும். ‘காட் ஃபாதர்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும் அந்த படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிரஞ்சீவியின் சகோதரர், நடிகர் பவன் கல்யான் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களமிறங்கினார்.தேர்தலில் அவரது ஜன சேனா கட்சி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார், துணை முதல்வராக பவன் கல்யானும் பதவியேற்றார். அவர்களுடன் அமைச்சர்கள் பதவியேற்பும் நடைபெற்றது.இதுகுறித்து இயக்குநர் மோகன் ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“பவன் கல்யான் காரு மற்றும் சிரஞ்சீவி காரு-க்குமான பந்தத்தை காண நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். எதிர்கால நோக்கம் கொண்ட தலைவர். எதிர்காலம் நல்ல நபரின் கைகளில் தான் இருக்கிறது.” என அவர்கள் இருவரையும் சந்தித்த புகைப்படங்களை பதிவிட்டு கூறியிருக்கிறார்.விரைவில் மோகன் ராஜா இயக்கவிருக்கும் சிரஞ்சீவி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News