தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கங்குவா திரைப்படத்தில் நடித்த பிறகு தனது 44வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். சூர்யாவின் 44வது திரைப்படம் பீரியாடிக் கேங்ஸ்டர் கதை மற்றும் காதல் பின்னணியில் அமையப்போவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.தகவல்கள் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.