செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வாலின் காதலராக ஆதி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சுதீப் சாரங்கி. இவர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் செல்வராகவனிடம் கடைசியா ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க என கெஞ்சிக் கேட்கும் வீடியோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி காதல் கொண்டேன் படத்தில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் சுதீப் சாரங்கி.பதினெட்டு வயதில் பார்ப்பவர் எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு என அவர் ஆடிய நடனமும், அந்த காதல் காதல் காதலின் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா பாடலிலும் அவர் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திருப்பார்.
காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு என்னமோ பிடிச்சிருக்கு படத்தில் நடித்த சுதீப்புக்கு தமிழில் வேறெதுவும் பெரிதாக படங்கள் அமையவில்லை. அதன் பின்னர், இந்தி மற்றும் பெங்காலி மொழிப் படங்கள் மற்றும் சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தற்போது எந்த பட வாய்ப்புகள் இல்லாமாலும் கஷ்டப்பட்டு வருவதாக தெரிகிறது.
சுதீப் சாரங்கி, இருபது ஆண்டுகளுக்கு முன்பாக காதல் கொண்டேன் படத்தில் நடித்தது போல இப்பவும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நல்லா நடிப்பேன் செல்வா சார் ஒரு சான்ஸ் கொடுங்கள் என அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கேட்பதை பார்த்த ரசிகர்களுக்கு வியப்பையும் பரிதாபத்தயும் ஏற்படுத்தியுள்ளது.