ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அந்த படம் குறித்து அதில் நடித்து வரும் ராணா டகுபதி சமீபத்திய பேட்டியில் சில அப்டேட்களை லீக் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் மும்பை ஷெட்யூல் சமீபத்தில் நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வேறலெவலில் டிரெண்டானது.
இப்படம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே நடக்கும் போராட்டமாக பல உண்மை சம்பவங்களின் அடிப்படையாக கொண்டு அதிகம் ஆராயப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் அதை விட பெரிய கதையை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இப்படியொரு படத்தை ரஜினிகாந்த் தேர்வு செய்ததே பெரிய விஷயம் என்றும் இது வழக்கமான ரஜினிகாந்த் படமாக இருக்காது என ராணா டகுபதி கூறியுள்ளார்.
இதனைக்கண்ட ரசிகர்கள் அட கடவுளே வேட்டையன் படத்தை பற்றி இப்படி லீக் செய்துவிட்டாரே என புலம்பி வருகின்றனர்.