‘சேரனின் ஆட்டோகிராஃப்’ திரைப்படம்தான் நடிகை கோபிகாவின் முதல் தமிழ் திரைப்படம். இப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து நடிகை கோபிகா பேசுகையில், ‘ஆட்டோகிராஃப்’ தான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். எப்போதுமே, அப்படத்தின் லத்திகா கதாபாத்திரம் என்னுடைய ஃபேவரைட்.நான் சேரன் சாருக்கு எப்போதுமே நன்றி கடன்பட்டிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து லத்திகா கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த குழுவுக்கும் நன்றி.இப்படியான பெரிய திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததை எண்ணி எப்போதும் பெருமைகொள்வேன் என்றுள்ளார்.


