Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

300 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய கல்கி திரைப்படம்… தொடர்ந்து 200 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த பிரபாஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு காலத்தில் இந்தியத் திரையுலகத்தில் 100 கோடி வசூல் சாதனை என்று கருதப்பட்டது. ஆனால், சமீபத்திய இரண்டு வருடங்களில் 1000 கோடி வசூல் சாதனையாக மாறியுள்ளது.

இருப்பினும் 100, 200 கோடி வசூல் கடப்பதும் முக்கியமானது. இந்த வகையில் தெலுங்குத் திரையுலகத்தில் தொடர்ந்து 200 கோடி வசூல் கொடுத்த நடிகராக பிரபாஸ் மாறியுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படம் அவரது 6வது 200 கோடி படமாக அமைந்துள்ளது. இந்தப் படம் 500 கோடி வசூலைக் கடக்கப் போவது உறுதி. 1000 கோடியைக் கடக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

“பாகுபலி 1, பாகுபலி 2, சாஹோ, ஆதி புருஷ், சலார்” ஆகிய படங்கள் இதற்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான 200 கோடி வசூலைக் கடந்த படங்கள். இருப்பினும் தென்னிந்திய அளவில் 200 கோடி படங்களில் 7 படங்களுடன் விஜய் முன்னிலையில் இருக்கிறார். அடுத்து ‘தி கோட்’ படமும் 200 கோடி வசூலைக் கடந்தால் அவரது கணக்கில் 8 படங்கள் சேர்ந்துவிடும்.

- Advertisement -

Read more

Local News