Advertisement

புதிய புகைப்படங்களால் ரசிகர்களைக் கவர்ந்த பிரக்யா ஜெய்ஸ்வால்!

தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரக்யா ஜெய்ஸ்வால், ‘காஞ்சே’, ‘அகண்டா’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். திரைப்படங்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நவீன மற்றும் பாரம்பரிய உடைகளில் விதவிதமான போஸ்களில் எடுத்துள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகளும் கருத்துகளும் குவிந்து வருகின்றன. பிரக்யாவின் தோற்றத்தைப் பாராட்டி ரசிகர்கள் பதிவிட்டு வரும் நிலையில், அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply