Advertisement

ரஷ்மிகாவின் ‘மைசா’ படத்தில் புதிய வடிவம் பெறும் 1997-ம் ஆண்டு பாடல்!

ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக, 1997-ல் வெளியான ‘ஒசே ராமுலம்மா’ படத்தின் பிரபல பாடல் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாராயண ராவ் இயக்கத்தில் விஜயசாந்தி நடித்த அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்தான் தற்போது புதிய வடிவில் மீண்டும் உருவாகியுள்ளது.

இந்தப் புதிய பாடலுக்காக அதன் அசல் கலைஞர்களான பாடலாசிரியர் சுட்டால அசோக் தேஜ், பாடகர் வந்தேமாதரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடலுக்கு இசையமைத்துப் பாடியிருந்த வந்தேமாதரம் ஸ்ரீனிவாஸ், தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய பதிப்பையும் பாடியுள்ளார். ரவீந்திர புள்ளே இயக்கும் ‘மைசா’ படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் பின்னணியில் தயாராகியுள்ள இப்படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் நவம்பர் 27-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply