Advertisement

57வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ்-க்கு அஞ்சலி!

57 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நவம்பர் 20 ஆம் தேதி முதல் கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் அண்மையிலே மறைந்த இயக்குனர் பாரதிராஜா, மற்றும் அவரது சீடரான கே. பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக பாரதிராஜாவின் “முதல் மரியாதை”, மற்றும் பாக்யராஜின் “முந்தானை முடிச்சு” ஆகிய படங்கள் திரையிடப்பட இருக்கின்றன

கே.பாக்யராஜ் கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்துள்ள “முந்தானை முடிச்சு” நவம்பர் திரைப்படம் 22 ஆம் தேதி பகல் 12 மணிக்கு திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் பாக்கியராஜின் மனைவியும் நடிகியுமான பூர்ணிமா பாக்யராஜ் கலந்து கொள்கிறார்

பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த “முதல் மரியாதை” நவம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று காலை 11:30 திரையிடப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் பாரதிராஜாவின் நண்பரும், முதல் மரியாதை படத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியவருமான சித்ரா லட்சுமணன் கலந்து கொள்கிறார்.

இந்த விழாவில் ராதிகா நடிப்பிலும் சிவக்குமார் முருகேசன் இயக்கத்திலும் உருவான “தாய் கிழவி”, ஜோயல் விஜய் இயக்கத்திலே உருவாகியுள்ள “கூடு” சத்திய சிவா இயக்கத்திலே விஜயகுமார் நடித்துள்ள “அறிவு” விஜய் மணி இயக்கியுள்ள “அட்டப்படி”, எஸ் கண்ணன் இயக்கத்திலே உருவாகியுள்ள “ஸ்குரோல்” ஆகிய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன

Add a Comment

Leave a Reply