Advertisement

பிரார்த்தனா நாதன், தேஜூ அஸ்வினி இணைந்து நடிக்கும் புதிய தமிழ் – தெலுங்கு காதல் படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய காதல் திரைப்படத்தில் நடிகைகள் பிரார்த்தனா நாதன், தேஜூ அஸ்வினி இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘பார்க் கிங்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரார்த்தனா நாதன் ஒரு கதாநாயகியாகவும், ‘என்ன சொல்லப் போகிறாய்’, ‘பிளாக்மெயில்’ படங்களில் நடித்த தேஜூ அஸ்வினி மற்றொரு கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

காதலை மையமாகக் கொண்டு இளைய தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது. படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply