Advertisement

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வெப் தொடரில் தபு!

நடிகை தபு, அடுத்ததாக நாகார்ஜுனாவின் 100-வது படமான ‘கிங் 100’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், முதன்முறையாக வெப் தொடரிலும் நடிக்க உள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள், 17 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகிறது.

‘அறம்’ படத்தில் நயன்தாரா நடித்ததைப் போன்ற முக்கியமான கதாபாத்திரத்தில் தபு நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘தி ரயில்வே மென்’ வெப் தொடரை இயக்கிய ஷிவ் ரவைல் இப்படத்தையும் இயக்குகிறார்.

Add a Comment

Leave a Reply