Advertisement

உலக முழுவதும் வெளியான தனுஷின் ‘ஓம்’ – அதிகாலை முதலே ரசிகர்கள் கொண்டாட்டம்!

‘அமரன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள ‘ஓம்’ இன்று திரையரங்குகளில் வெளியானது. வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 6 மணி காட்சியைக் காண ரசிகர்கள் குவிந்தனர். படம் வெளியாவதற்கு முன்பும், திரையிடப்பட்ட பிறகும் பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் நடனமாடியும் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Add a Comment

Leave a Reply