சூரியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட ஜிகேஎம்.தமிழ் குமரன் மற்றும் ஜேசன் சஞ்சய்!

நடிகர் சூரியின் அண்ணன் மகனின் திருமண நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்ற இந்த விழாவில், திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்குமரன், இயக்குநர் ஜேசன் சஞ்சய், நடிகர் சஞ்சீவ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் வழியாக இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வெளியானபோது ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய் விரைவில் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கலாம் என்ற தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கெனவே அவரது இயக்குநர் அறிமுகம் கவனம் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அவர் நடிப்பிலும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு திரையுலக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Add a Comment

Leave a Reply