நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம், முதல் வாரத்திலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது. ஜித்து மாதவன் இயக்கிய இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டில் சூர்யாவுக்கு மூன்றாவது வெற்றிப் படம் கிடைத்துள்ளது.
இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எங்கள் மனம் நன்றியால் நிறைந்துள்ளது. மொழி, எல்லைகளைக் கடந்து ‘சீன்’ படத்திற்கு நீங்கள் அளிக்கும் அன்பும் ஆதரவும் எங்கள் குழுவினருக்கும், எனக்கும் ஜோவுக்கும் மிகவும் மதிப்புமிக்கது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து திரையரங்குகளுக்கு வந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய அன்பு இன்னும் பல புதிய எல்லைகளை நோக்கிப் பயணிக்க எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. என்றென்றும் நன்றியுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளனர்.
‘ழகரம் ஸ்டூடியோஸ்’ சார்பில் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ்ரீ தாமோதரன் இணைந்து தயாரித்துள்ளார். வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு படத்தொகுப்பு செய்துள்ளார். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். சூர்யாவுடன் நஸ்லன், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் அம்சங்களுடன் உருவான ‘சீன்’, இந்த ஆண்டில் சூர்யா நடித்த மூன்றாவது படமாகும். விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் கிடைத்த வரவேற்புடன், வசூலிலும் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
