தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செலிபிரிட்டி மாஸ்டர் ஷெஃப் தமிழ்’ சமையல் நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. சோனி விழா தொலைக்காட்சி மற்றும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா நடுவராகப் பங்கேற்று வருகிறார்.
தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பான சிறப்பு எபிசோடில், தனது சிறுவயது பண்டிகை நினைவுகளை சமந்தா பகிர்ந்துகொண்டார். அப்போது தனக்குப் பிடித்தமான தீபாவளி இனிப்பு அதிரசம் என்று தெரிவித்தார்.
சிறுவயதில் தீபாவளி சமயத்தில் வீட்டுக்கு வெளியே இருந்த கடையில் அதிரசம் வாங்கி சாப்பிடுவதற்காக ஒரு ரூபாய் சேமித்து வைத்திருந்ததாக நினைவுகூர்ந்தார். இந்த அனுபவத்தைப் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் மற்ற நடுவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பண்டிகை நினைவுகள், குடும்பத்துடன் செலவிட்ட தருணங்கள், பிடித்த உணவுகள் குறித்த உரையாடல்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
