மீண்டும் பிசியாக நடிக்கும் ஜோதிர்மயி‌… அமல் நீரத் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள்!

‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை ஜோதிர்மயி, தொடர்ந்து ‘நான் அவன் இல்லை’, ‘சபரி’, ‘வெடிகுண்டு முருகேசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

முதல் திருமணம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு மலையாள இயக்குநர் அமல் நீரத்தைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2024-ம் ஆண்டு அமல் நீரத் இயக்கத்தில் ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் நடித்த ‘போகன்வில்லா’ படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார். தற்போது அமல் நீரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேச்சுலர் பார்ட்டி டூயக்ஸ்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், சவுபின் சாஹிர், நஸ்லேன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட மலையாள நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். ஜோதிர்மயி தனது கணவர் இயக்கும் படங்களில் மட்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Add a Comment

Leave a Reply