ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனுஷ், தனது ரசிகர்கள் குறித்துப் பேசுகையில், என்னை அவர்கள் இயக்குகிறார்கள், இவர்கள் இயக்குகிறார்கள் எனப் பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. என் பக்கம் யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான். என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை” என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். முதற்கட்டமாக சென்னையிலும், கன்னியாகுமரியிலும் தொடங்கப்பட உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசியல் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம் என்றும் பேசினார்.
